கொரோனா பரவல் : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:
Ministry of Home Affairs (MHA) issued an Order today with Guidelines for effective control of #COVID19, which will be effective from April 1, 2021, and remain in force up to April 30, 2021. https://t.co/uBraPcXOBR
— TNCoronaUpdates (@Covid19TNUpdate) March 23, 2021
RT- PCR பரிசோதனையை 70 சதவீதம் அளவில் மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை தொடர்பை கண்டறிதல், உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை செய்ய வேண்டும்.
மாநிலங்களுக்கு இடையே தனி நபர் நகர்வு போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க தேவையில்லை
மாநிலத்திற்குள் தனிநபர் நகர்வு, போக்குவரத்துக்கு கட்டுப்பாடு தேவையில்லை
பொது இடங்கள் பணியிடங்கள் கூட்டம் நிறைந்த இடங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கண்டிப்பாக மநில அரசுகள் வெளியிட வேண்டும்.
சூழலை பொறுத்து மாவட்ட, நகர அளவில் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தலாம். தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 முதல் அமலில் இருக்கும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Leave your comments here...