சுங்கச்சாவடிகளுக்கு மூடுவிழா..! ஜிபிஎஸ் வழியாக கட்டண வசூல் – மத்திய அரசு அதிரடி..!
இந்தியா முழுவதும் உள்ள கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றி, ஒரு வருடத்திற்குள் முழுமையான ஜி.பி.எஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது இது பற்றி பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, “ஓர் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைத்து டோல்கேட்டுகளும் அகற்றப்படும் என உறுதியளிக்கிறேன். அதற்கு பதில் ஜி.பி.எஸ் வழியாக கட்டண வசூல் நடக்கும்.
ஜி.பி.எஸ் இமேஜிங் முறையில் பணம் பெறப்படும்.” என்றார். மேலும், “93 சதவீத வாகனங்கள் பாஸ்டேகைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்துகின்றன. மீதம் 7 சதவீத வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்திய போதும் பாஸ்டேகை எடுக்கவில்லை.” என்றார்.
இதுவரை பாஸ்டேக் எடுக்காத வாகனங்கள் குறித்து விசாரிக்கும் படி போலீசாருக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்தார். வாகனங்களில் பாஸ்டேக் பொருத்தாவிட்டால், ஜிஎஸ்டி ஏய்ப்பு வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும். சுங்கச்சாவடிகளில் 2016 முதல் பாஸ்டேக் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது கடந்த பிப்.,16 முதல் கட்டாயமானது.
இதன் மூலம் சுங்கச்சாவடிகள் நெரிசல் ஓரளவு குறைகிறது. பாஸ்டேக் இல்லை என்றால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும்.முன்னதாக டோல் பிளாசாக்களில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் ஃபாஸ்டேக் 2016’இல் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி 16 முதல், ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் நாடு முழுவதும் உள்ள மின்னணு டோல் பிளாசாக்களில் இரட்டை கட்டண கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துதல் மின்னணு முறையில் செய்யப்படுவதால், வாகனங்கள் சுங்கச்சாவடிகள் வழியாக தடையின்றி செல்வதை உறுதிசெய்ய முடியும். புதிய வாகனங்களில் ஃபாஸ்டேக்குகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அனைத்து வானங்களிலும் பொருத்தப்பட்டுள்ளதாக கூறிய நிதின் கட்கரி, அதே நேரத்தில் பழைய வாகனங்களுக்கு இலவச ஃபாஸ்டேக்குகளை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
Leave your comments here...