35 கி.மீ. பின்னோக்கி வேகமாக சென்ற ரயில் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.!

இந்தியா

35 கி.மீ. பின்னோக்கி வேகமாக சென்ற ரயில் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.!

35 கி.மீ. பின்னோக்கி  வேகமாக சென்ற ரயில் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.!

டெல்லியில் இருந்து இன்று உத்தரகண்ட் மாநிலம் தனக்பூர் நோக்கி பூர்ணகிரி ஜனசதாப்தி ரெயில் சென்றுகொண்டிருந்தது. காதிமா-தனக்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, குறுக்கே வந்த பசு ரெயிலில் அடிபட்டது.

இதனால், ரெயில் டிரைவர் பிரேக்கை அழுத்தி ரெயிலை நிறுத்தி உள்ளார். பின்னர் மீண்டும் ரெயிலை இயக்கியபோது, எதிர்பாராதவிதமாக ரெயில் பின்னோக்கி சென்றுள்ளது.


ரெயில் வேகமாக பின்னோக்கி சென்றதால் பயணிகள் பீதியடைந்தனர். ரெயில் பின்னோக்கி செல்வதை கட்டுப்படுத்த முடியாததால், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் உள்ள ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டன.

அதேசமயம் வேகமாக சென்றதால் தடம்புரண்டு விபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக ரெயில் தடம்புரளவில்லை. ஒரு வழியாக காதிமா அருகே ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது. 35 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து அது கோடிமா என்ற இடத்தில் நின்றுள்ளது. பின்னர் பயணிகள் கீழே இறக்கப்பட்டு, சாலை மார்க்கமாக தனக்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில் டிரைவர் மற்றும் கார்டு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக ரெயில்வே தெரிவித்துள்ளது. ரெயில் பின்னோக்கி சென்றபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave your comments here...