கேரள சட்டமன்ற தேர்தல்: ஏபிபி – சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்.?

அரசியல்

கேரள சட்டமன்ற தேர்தல்: ஏபிபி – சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்.?

கேரள சட்டமன்ற தேர்தல்: ஏபிபி – சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்.?

கேரள மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த ஆளுங்கட்சி, உள்ளாட்சி தேர்தலில் விஸ்வரூப வெற்றி பெற்றுள்ளது. இந்த உற்சாகத்துடன் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராகிக் கொண்டிருக்கிறது.

தென்னிந்திய மாநிலங்களில் போதிய செல்வாக்கு பெற்றிராத பாஜக, இம்முறை எப்படியாவது வெற்றி முகம் காண வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதில் கேரளாவும் ஒன்று. 140 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட கேரள மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளன. ஆட்சியமைக்க 71 தொகுதிகளில் வென்று பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் கேரள சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதைச் சொல்லும் ஏபிபி – சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி,* 77-85 தொகுதிகளில் வென்று பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு (LDF) மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். கடந்த முறை 92 தொகுதிகளில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.54-62 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (UDF) வெற்றி பெறும். கடந்த தேர்தலை (47) விட இம்முறை அதிக தொகுதிகளில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. 0-2 தொகுதிகளில் மட்டுமே வெல்லக்கூடும். ஒட்டுமொத்தமாக கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக முறையே 0.6%, 0.9%, 0.3% வாக்குகள் சரியும் என்று ஏபிபி – சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...