கோஷ்டி பூசல்…இரவோடு இரவாக வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – 21 தொகுதிகளுக்கு வெளியீடு
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன. தொடர்ந்து தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை, இக்கட்சிகளின் மேலிடங்கள் கூடி ஆலோசித்து, மூத்த தலைவர்களின் ஒப்புதல் பெறப்பட்ட பின்பே, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்காக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் #VoteForCongress #வாங்க_ஒரு_கை_பாப்போம் pic.twitter.com/tLuRD8AsBf
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) March 13, 2021
மதுரை மேலூர் தொகுதியில் மாணிக்கம் தாகூரின் மாமனாருக்கு காங்கிரஸ் கட்சியில் சீட் வழங்கப்பட்டுள்ளது. ஈவி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வே.ரா ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசர் மகன் எஸ்.டி ராமசந்திரன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். திருவாடானை தொகுதியில் தற்போதைய சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆர் ராமசாமி மகன் கரு.மாணிக்கம் போட்டியிடுகிறார்.சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்க்கு கன்னியாகுமரி லோக்சபா தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது குமரி தொகுதியில் மறைந்த வசந்த்குமார் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் மயுரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் கே.செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார்.விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...