சென்னை விமான நிலையத்தில் ரூ.65.7 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்.!
சென்னை விமான நிலையத்தில், ரூ.65.7 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை, சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சார்ஜாவில் இருந்து இன்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜா முகமது (42) என்பவரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது மலக் குடலில் இருந்து 1.23 கிலோ தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டது. அதிலிருந்து 1.12 கிலோ தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.52 லட்சம் ஆகும்.
அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது, 7 ஐபோன் 12 ப்ரோ, 12 ஏர்பாட்ஸ் ப்ரோ, 10 ஆப்பிள் கடிகாரங்கள், 12 ஆப்பிள் பவர் அடாப்டர்கள், 6 சாம்சங் கேலக்சி கடிகாரங்கள், 4 பெட்டி டன்ஹில் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.13.7 லட்சம். அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மொத்தம் ரூ.65.7 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றம் எலக்ட்ரானிக் பொருட்கள் சுங்கச்சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...