அயோத்தி வழக்கு : தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்க வேண்டும்” – ஆர்எஸ்எஸ் வேண்டுகோள்..!
அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் வரும் நவம்பர் 17-ஆம் தேதிக்கு முன்பாக தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிக முக்கியமான வழக்காக பார்க்கப்படுவதால், இதன் தீர்ப்புக்காக ஒட்டுமொத்த நாடே காத்திருக்கிறது.
இந்நிலையில், ராஷ்டிரீய ஸ்வயம்சேவாக் சங் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “இன்னும் சில நாட்களில் ராமஜென்ம பூமி நிலம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஒவ்வொருவரும் அதை திறந்த மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். தீர்ப்பிற்கு பிறகு நாட்டின் சூழலை அமைதியான முறையில் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய பொறுப்பு ஆகும் என ஆர்எஸ்எஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட உள்ளது.
— RSS (@RSSorg) October 30, 2019
மேலும் தீர்ப்பு வந்த பிறகு, ஏதேனும் நிகழந்துவிட்டால், அதற்கான பழி அவர்கள் மீது வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகத் தெரிகிறது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தீர்ப்பைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 4 வரை ஹரித்வாரில் முக்கியக் கூட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்துள்ளது.இந்தக் கூட்டம் ஒவ்வொரு 5 ஆண்டுகளும் நடைபெறும். இதற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமை வகிக்கவுள்ளார். சுரேஷ் பையாஜி ஜோஷி, தாத்தத்ரேயா ஹோசாபலே மற்றும் பல முக்கியத் தலைவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். பாஜக தலைவர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர். கட்சிக்கும், அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு போன்ற விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், கோயில் கட்டுவதற்கான முக்கியத் திட்டங்கள் அல்லது அதற்கான தேதிகள் குறித்த அறிவிப்புகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.அதேசமயம், நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஆர்எஸ்எஸ் ரத்து செய்துள்ளது. இதனால், பிரசாரகர்கள் அனைவரும் தங்களது மையங்களிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்த பிறகு மட்டுமே பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.