சென்னை விமான நிலையத்தில் ரூ.4.75 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்.!
நெதர்லாந்தில் இருந்து போதை மாத்திரைகள் கடத்தி வரப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையில் உள்ள வெளிநாட்டு தபால் அலுவகத்துக்கு வந்த ஒரு பார்சலை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதில் கன்னியாகுமாரியைச் சேர்ந்த ஒருவரின் முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.அதை திறந்து பார்த்தபோது, பாலீத்தீன் பை ஒன்றில், இளஞ்சிவப்பு நிறத்தில் 95 மாத்திரைகள் இருந்தன. இது எம்டிஎம்ஏ என்ற போதை பொருள் மாத்திரைகள் என சந்தேகிக்கப்படுகிறது.
Chennai Air Customs seized 95 MDMA tablets valued at Rs.4.75 lakhs under NDPS Act 1985, from a postal parcel which arrived from Netherlands at Foreign Post Office, Chennai.#IndianCustomsatwork pic.twitter.com/Y0MwQGE22g
— Chennai Customs (@ChennaiCustoms) March 5, 2021
இவற்றின் மதிப்பு ரூ.4.75 லட்சம். இந்த மாத்திரைகள் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...