அயோத்தியில் ராமர் கோவிலின் பரப்பளவை 70 ஏக்கரில் இருந்து 107 ஏக்கராக விரிவுபடுத்த அறக்கட்டளை நிர்வாகம் முடிவு .!

ஆன்மிகம்இந்தியா

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவிலை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கட்டி வருகிறது. கோவிலின் பரப்பளவை 70 ஏக்கரில் இருந்து 107 ஏக்கராக விரிவுபடுத்த அறக்கட்டளை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

எனவே, கோவிலுக்கு அருகே உள்ள இதர கோவில்கள், வீடுகள், காலி மனைகள் ஆகியவற்றின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்தவகையில், முதல்கட்டமாக, கோவில் அருகே உள்ள 7 ஆயிரத்து 285 சதுர அடி நிலம் வாங்கப்பட்டுள்ளது. சதுர அடிக்கு ரூ.1,373 என்ற விலையில், இந்த நிலத்துக்கு ரூ.1 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராய் பெயரில், கடந்த மாதம் 20-ந் தேதி பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 107 ஏக்கருக்கு கோவிலை விரிவுபடுத்த இன்னும் 14 லட்சத்து 30 ஆயிரத்து 195 சதுர அடி நிலம் வாங்க வேண்டி உள்ளது.

Leave your comments here...