தமிழகத்திலேயே முதன்முறையாக நிலையூர் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி ஐஎஸ்ஓ தர சான்றிதழ்.!

சமூக நலன்தமிழகம்

தமிழகத்திலேயே முதன்முறையாக நிலையூர் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி ஐஎஸ்ஓ தர சான்றிதழ்.!

தமிழகத்திலேயே முதன்முறையாக நிலையூர் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி ஐஎஸ்ஓ தர  சான்றிதழ்.!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. திருப்பரங்குன்றம் பகுதியில் மிகவும் பின்தங்கிய பகுதியான நிலையில் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குறைந்த அளவிலான மாணவர் எண்ணிக்கையில் இருந்து வந்தது. தற்போது, புதிதாக தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று விநாயகமூர்த்தி என்பவர் கடந்த 5 மாதங்களுக்கு முன் பொறுப்பிற்கு வந்துள்ளார் .

அதனை எடுத்து பள்ளியின் கல்வித்தரம் மற்றும் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனடிப்படையில், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய நிலையூர் உயர்நிலைப்பள்ளியில் முதல்முறையாக தமிழகத்திலேயே ஐ எஸ் ஓ 9001 – 2015 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மூன்று மாடிகள் கொண்ட பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் நேரிடையாக தொடர்பு கொள்ள மூன்றாம் மாடியிலிருந்து கீழே வரவோ அல்லது மேலே உள்ளவர் களை தொடர்பு கொள்ளவோ சில இடர்பாடுகள் உள்ள சூழ்நிலையில் இண்டர்காம் வசதி பொருத்தப்பட்டு அங்கிருந்து எந்த பகுதியிலிருந்து தலைமையாசிரியர் அல்லது மற்ற ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு பேசும் வகையில் இந்த இன்டர்காம் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதனால், உடனுக்குடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் அலைச்சலைக் குறைக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது .மேலும் , இப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகன் மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் 6ம் வகுப்பு படித்து வந்த நிலையில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக தனது மகனை இந்த பள்ளியில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பார்கள் இந்நிலையில் தலைமை ஆசிரியரே தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்தது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.

மேலும் , பள்ளிக்கு தேவையான ஆழ்துளை கிணறு, விளையாட்டு மைதானம் அமைத்து தர ,பெஞ்ச் ,மேஜை போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்எல்ஏ மூலம் பெற்று பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. இங்கு மாணவர் களுக்காக தகவல் பலகைகள் மற்றும் பள்ளியில் அனைத்தும் போர்டுகளும் பெயிண்டிங் வசதி செய்து பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்தியபஜனாதிபதி, பிரதமர் ,தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் கல்வித்துறை செயலாளர் போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும், மாணவர்களுக்கு அவசர காலத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் 108, மற்றும் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் முக்கிய மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளின் போன் நம்பர்கள் தகவல் பலகையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சிறப்பம்சங்களை ஏற்படுத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மேலும் ஆங்கில வழிக் கல்வியின் மூலம் மாணவர்களுக்கு சிறப்பாக ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. அரசு பள்ளியில் கல்வி தரம் மட்டுமல்ல பள்ளியின் தரத்தை உயர்த்திக் காட்டும் இவர்களின் சேவைளுக்கு பாராட்டுதல் போற்றுதலுக்குரியது.

செய்தி: Ravi Chandran

Leave your comments here...