சோழவந்தானில் மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி
சோழவந்தானில் மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடந்தது இதற்கான பரிசளிப்பு விழாவும் நடந்தது சோழவந்தான் மார்ச் 2 சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகத்தின் சார்பாக மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் மூன்று நாட்கள் சோழவந்தான் அரசு அரசஞ் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட அளவில் 22 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன முதல் பரிசு தமிழ்நாடு போலீஸ் அணி இரண்டாவது பரிசு மதுரை ஆயுதப்படை போலீஸ் அணி மூன்றாவது பரிசு சேது பிபிசி அணி நான்காம் பரிசு பிகாஸ் மதுரை அணி ஆகிய பரிசுகளைப் பெற்றனர்.
இதற்கான நடந்த பரிசளிப்பு விழாவிற்கு சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் ராமன் தலைமை தாங்கினார் செயலாளர் முருகேசன் கவுரவ ஆலோசகர் தீர்த்தம் என்ற ராமன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மோகன் வரவேற்றார் மதுரை மாவட்ட கூட பந்தாட்ட கழகத்தின் மாவட்டச் செயலாளர் வசந்தவேல் முன்னால் மேஜரா கோட்ஸ் செல்வராஜ் பிஆர்சி தலைமை அலுவலக சூப்பிரண்ட் மூர்த்தி கணேஷ் ராஜன் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள் சிறப்பு விருந்தினர்கள் முரளி சோழகர் பேட்டை பெரியசாமி முன்னாள் யூனியன் ஆணையாளர் ராசு மீன் வளத்துறை அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர் முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் சுந்தரேசன் நினைவாக பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
Leave your comments here...