வைகை புயல் வடிவேலு போல நாள்தோறும் ஸ்டாலின் நடித்துக்கொண்டுள்ளார் – அமைச்சர் செல்லூர் ராஜு

அரசியல்தமிழகம்

வைகை புயல் வடிவேலு போல நாள்தோறும் ஸ்டாலின் நடித்துக்கொண்டுள்ளார் – அமைச்சர் செல்லூர் ராஜு

வைகை புயல் வடிவேலு போல நாள்தோறும் ஸ்டாலின் நடித்துக்கொண்டுள்ளார் –  அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை முனிச்சாலை பகுதியில் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கூட்டுவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்:-பத்தாண்டு நிறைவு செய்த அதிமுக ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் ஜெயலலிதா.

தமிழகத்தில் மக்கள் போற்றும் திட்டங்களை தந்த முதல்வர் எடப்பாடியாருக்கு துணையாக அரணாக இருப்பவர் துணை முதல்வர் ஒபிஎஸ்.இராம, லட்சுமணனாக இராம ராஜ்ஜியத்தை கொடுத்து கொண்டிருப்பவர்கள் ஒபிஎஸ் ஈபிஎஸ்.ஒரு மாநில திட்டத்தை அகில இந்திய அளவில் கொண்டு போய் அனைத்து மாநிலங்களும் சத்துணவு போடும் திட்டத்தை கொண்டு வந்தவர் எம்ஜிஆர்.

ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று ஆந்திரா கர்நாடகா பீகார் என பரவிக்கொண்டுள்ளது.பெண்களுக்கான ஆட்சியை நடத்தியவர் ஜெயலலிதா. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 3000 கோடியில் கடன்களை அள்ளிக்கொடுத்தது அதிமுக. ஆனால் திமுக ஆட்சியில் வெறும் 1000 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. ஸ்டாலின் நாடகமாடுகிறார். ஆட்சியை காமலை கண்ணக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் போல எங்கள் ஆட்சியை ஊழல் ஆட்சி எனக்கூறுகிறார்.

ஊழல்வாதிக்கு ஊழல் மட்டுமே தெரிகிறது. எதற்கெடுத்தாலும் ஊழல். எந்த திட்டம் ஆனாலும் ஊழல் என ஸ்டாலின் கூறுகிறார்.பல்வேறு திட்டங்கள் மூலம் 5500 ரூபாய் கொடுத்து மாணவர்களை கல்லூரிக்கு அனுப்பியது அதிமுக ஆட்சி. புத்தி கெட்டவனிடம் என்ன பேசுவது? மக்குகளிடம் எதைச்சொல்வது. இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே 49% உயர்கல்வி செல்கின்றனர். அம்மா உணவகம் மூலம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பேர் பயனடைகின்றனர். எப்போ வரும் எப்போ போகும் என மின்சாரத்திற்கு காத்து கிடக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி இருந்தது. திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வந்தார்களோ அப்போதெல்லாம் ஊழல் பெருத்தது.

அதிமுக மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்காமல் 11 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்துள்ளோம்.ஆனால் ஒன்பது ஆண்டுகளா காங்கிரஸ் திமுக ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக இருந்த திமுக என்ன செய்தது? பொய்யை சொல்லி புரட்டை சொல்லி ஆட்சிக்கு வரலாம் என துடிக்கிறார் ஸ்டாலின். ஹெல்மேட் போட்டு திருடுபவர்கள் திமுகவினர். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் திமுக.

முதன்முதலாக அமைச்சராக பொறுப்பேற்று ஜெயலலிதாவிடம் மதுரைக்கு வளர்ச்சி நிதி கொடுக்க வேண்டும் என கூறிய போது, உடனே 250 கோடி கொடுத்தார். கூடவே மதுரை திமுகவில் 250 ரவுடிகள் உள்ளதாகவும் கூறினேன். அதையும் பார்த்துக்கொள்கிறேன் எனச்சொல்லி ரவுடிகளை அடக்கியவர் ஜெயலலிதா. மதுரையில் உள்ள ரவுடிகள் அனைவரும் அழகிரியை கையை காட்டிவிட்டு ஸ்டாலின் பின்னால் சென்று விட்டனர்.

மதுரையில் திமுக-வில் 250 ரவுடிகள் இருந்தார்கள் அன்று அதனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறினோம் இன்று அவ்வாறு யாராவது உள்ளார்களா? மதுரையில் இருந்த ரவுடிகள் அனைவரும் நிர்வாக திறமை கொண்ட அழகிரியை படுகுழியில் தள்ளி விட்டு தற்போது ஸ்டாலின் பின்பு சென்று விட்டனர். திமுக ஸ்டாலின் பின்னால் ரவுடிகள் தற்போது திரண்டுள்ளனர். திமுக பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாததால் அவர்கள் கை பரபரவென்று உள்ளது.

மதுரையில் ஒரு தொகுதியில் திமுக ஜெயித்துவிட்டால் கூட ஆண்டவனால் கூட மதுரையை காப்பாற்ற முடியாது. திமுக மதுரையை பிடித்துவிட்டால் மதுரையை பிடிக்க முடியாது. துணைமுதல்வராக மீத்தேன் ஸ்டெர்லைட் திட்டங்களுக்கு கையெழுத்து போட்டுவிட்டு, தற்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதனை அறிவித்து பாதுகாத்தவர் எடப்பாடி. உள்ளாட்சித்துறை அமைச்சராக துணைமுதல்வராக இருந்த ஸ்டாலின் ஏன் அன்று மக்களை சந்திக்கவில்லை. கூட்டம் நடத்தவில்லை.

திமுக ஆட்சிகாலத்திலேயே மதுரைக்கு வர பயந்தவர் ஸ்டாலின். சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஸ்டாலினுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கிய ஆட்சி அதிமுக. பதவிவெறி தலையை பிடித்து ஆட்டிக்கொண்டுள்ளது ஸ்டாலினுக்கு. பதவி ஆசை இருக்கலாம்.ஆனால் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி மீது இவ்வளவு மோகம் இருக்கக்கூடாது. காங் திமுக ஆட்சிக்காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. முழுமையாக ஆட்சியை நிறைவு செய்து மக்களை சந்திக்க போகிறோம். நாங்கள் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லுவோம்.

மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக்கு வரலாம் என பார்க்கிறார்கள்,1100 அழுத்தினால் மக்களின் பிரச்சனை தீர்க்கப்படும் என முதல்வர் அறிவித்த நிலையில், பெட்டியில் மனு போடுங்கள் என ஸ்டாலின் கூறுகிறார். அத்தைக்கு எப்போது மீசை முளைப்பது அவர் என்று சித்தப்பா ஆவது என்ற கதையாக உள்ளது. முதல்வர் பதவிக்கு ஸ்டாலின் சரிப்பட்டு வர மாட்டார்.வரவே மாட்டார். வடிவேலு தற்போது நடிக்கவில்லை. ஆனால் வைகை புயல் வடிவேலு போல நாள்தோறும் ஸ்டாலின் நடித்துக்கொண்டுள்ளார்.

முதல்வர் நம்மிலும், நம் குடும்பத்திலும் ஒருவர். நாள்தோறும் எளிமையாக லட்சக்கணக்கான மக்களை நேரில் சென்று சந்திப்பவர். கொரானா இன்னும் குறையவில்லை. தற்போது பல மாநிலங்களில் கொரானா அதிகரித்து வருகிறது. அனைவரும் முகக்கவசம் அணிந்து வர அமைச்சர் அறிவுறுத்தல். நீங்கள் எங்களுக்கு முக்கியம். உங்கள் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். மதுரையில் பேசிய ஸ்டாலின் என்னை கிண்டல் செய்கிறார். மதுரை சிட்னியாகிவிட்டதா? வைகை தேம்ஸ் நதியாக மாறி விட்டதா எனக்கேட்கிறார். ஜெயலலிதாவும், எடப்பாடியாரும் பல கோடிகளை கொடுத்துள்ளனர். எடுத்த உடனே எல்லாம் வந்துடுமா? தற்போது தான் கட்டுமானங்கள் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. வளர்ச்சிப்பணி நடக்கும் ஆட்சியை மக்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

குருஷேத்திரப்போரில் துரோகிகளை வீழ்த்த வேண்டும். அடியோடு திமுகவை அழிக்க வேண்டும். துரோகக்கும்பலை விரட்ட வேண்டும். அரசியலில் துரோகிகள் உண்டு. இந்த இயக்கத்திலும் துரோகிகள் இருக்கிறார்கள். அவற்றையெல்லாம் அழிக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என பேசினார்.

Leave your comments here...