கோவில் சொத்துகள் தாரை வார்ப்பு: கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்.!

சமூக நலன்

கோவில் சொத்துகள் தாரை வார்ப்பு: கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்.!

கோவில் சொத்துகள் தாரை வார்ப்பு: கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்.!

தமிழக அரசின் அரசாணை எண்.G.0.No.318/ 30082019 இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்து திருக்கோயில்கள், மற்றும் திருமடங்களின் சொத்துக்கள், விவசாய விலை நிலங்கள், கட்டிடங்கள், காலி மனைகள் ஆகியவற்றை நீண்டகாலம் யார் அனுபவித்து வருகின்றார்களோ அவர்களுக்கே பகிர்ந்து கொடுத்தல் அல்லது பெயர் மாற்றம் செய்து கொள்ளுதல் ஆகியவற்றிற்கு அனுமதி கொடுக்கும் வண்ணம் அரசாணை அமைந்துள்ளது.

இந்த அரசாணையை தொடர்பாக இதனை ரத்து செய்ய கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் பதில் மனுவில் விளக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலய பாதுகாப்புக் குழு திரு.டிஆர்.ரமேஷ்

இதனிடையே இந்து ஆலய பாதுகாப்புக் குழு தலைவரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஆர்வலருமான டிஆர்.ரமேஷ் அவர்கள் இது சம்மந்தமான வழக்குகளை நீதிமன்றத்தில் தொடர உள்ளார்.

இந்த சட்டத்தை பிறப்பித்த இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் வாய்ப்புகளும் உள்ளது. இது குறித்து டிஆர். ரமேஷ் அவர்கள் தனது டிவிட்டரில் பதிவு ஒன்றையும் பகிர்ந்து உள்ளார்.

 

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்

இந்த அரசனை குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் கூறும் போது:- ஏற்கனவே பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்து திருக்கோயில்களின் சொத்துக்கள், நிலங்கள் ஆகியவை பல இடங்களில் அக்ரமிக்கப்பட்டு உள்ளன. சுவாமி பெயரில் உள்ள சொத்துக்களை பட்டா மாறுதல் செய்ய முடியாது. ஆனால் நீண்ட கால குத்தகை, வாடகை அகியவற்றிற்கு விடமுடியும். ஏற்கனவே குத்தகை தாரர்கள் வாடகை தாரர்கள் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்பு மூலம் மோசடி ஆவணங்களை தயார் செய்து அபகரித்து உள்ளனர். தங்கள் பெயரில் உள்ள ஒப்பந்தங்கள் நீட்டித்து, அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் இந்த உத்தரவு ஆக்ரமிப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். மேலும் இந்த உத்தரவு சட்ட விரோதமானது ஆகும் இந்த அரசாணை ஆக்ரமிப்பாளர்களுக்கு சாதகமானது ஆகும். கோயில் சொத்துக்கள் கொள்ளை போவதற்கு காரணமாக இந்த உத்திரவு அமையும். எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் இது விஷயத்தில் தலையிட்டு இந்த உத்திரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கூறியுள்ளார். இந்த விவகாரம் பக்தர்கள் , இந்து இயக்க தலைவர்கள், ஆகியோர் மத்தியில் கடுமையான கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.!

By..
Krish Harikrishnan

Comments are closed.