மாநில அளவிலான சிலம்பப் போட்டி 15 மாவட்டத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு.!
மதுரை மாவட்டம் மாடக்குளத்தைச் சேர்ந்த கேபி சிலம்பம் அகாடமியின் மகா குரு பா.அன்பு சேகர் தலைமையில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப போட்டி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாக மாநில அளவிலான இரண்டு நாள் சிலம்பப் போட்டி திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று துவங்கியது.
சிலம்பப் போட்டியை, காவல் ஆய்வாளர் மாதவன்,மாடக்குளம் நாட்டாமை முத்துக்குமார், மீ. மூ.கருப்பு, வி டி என் .பிரபாகரன்
சிலம்பம் மணிகண்டன் இணைந்து துவங்கி வைத்தார். இதில் மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, நாமக்கல், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட உள்ளிட்ட 18 மாவட்டங்களைச் சேர்ந்த சிலம்ப வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இவர்களுள், 6 வயதில் இருந்து 25 வயது வரையில் ஒற்றை கம்பு வீச்சு,இரட்டை கம்பு வீச்சு சுருள் வீச்சு, தொட்டு முறை போட்டி என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு, பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Leave your comments here...