தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.!

தமிழகம்

தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.!

தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.!

வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம வருவாய் உதவியாளர்களுக்கு, சிறப்பு அலுவலக ஊழியர்களுக்கு இணையாக காலமுறை ஊதியம் 15700 வழங்கவேண்டும். கிராம உதவியாளர்களுக்கு முறையான ஓய்வு ஊதியம் 7850 வழங்க வேண்டும், கிராம அலுவலராக பதவி உயர்வு பெற்று சென்ற கிராம உதவியாளர்களுக்கு ஓய்வூதிய குறைகளை களைய வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் கிராம உதவியாளர்களுக்கு பொங்கல் போனஸ் 7000 வழங்க வேண்டும்.

வருவாய்த்துறையில் உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம உதவியாளர் பதவி உயர்வு பெற 10 ஆண்டு என்பதை 5 ஆண்டு களாக குறைக்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுவில் ரத்தத்தால் கையெழுத்திட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை 24.2.21 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

செய்தி: Ravi Chandran

Leave your comments here...