அரசு உருது பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய “தமுமுக – மமக” செயற்குழுவில் தீர்மானம்..!
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் ஓசூர் சாரதா மஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட தமுமுக-மமக அமைப்பின் தமுமுக மாநில செயலாளர் ஏஜாஸ் அஹமத் தலைமை பிரதிநிதி தருமபுரி சாதிக் பாஷா, தமுமுக ஊடகபிரிவு செயலாளர் அல்தாப் அஹமத், தலைமை கழக பேச்சாளர் ஓசூர் நவ்ஷாத் மாவட்ட,மாநகர, ஒன்றிய, பேரூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
– பத்தலப்பள்ளி முஸ்லிம் காலனியில் 60 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 1200 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களிற்கு அரசு பட்டா வழங்க வேண்டும்.
– பத்தலப்பள்ளி மற்றும் திருமல் கோட்டா பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மயானத்தில் சுற்று சுவர் எழுப்ப அரசு உதவ வேண்டும்.
– 2016 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்நாள் வரை உருது பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 57 உருது துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலி இடங்கள் உள்ளன.2017 ல் உருது வழியில் TET தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.அவர்களை இதுவரை பணி நியமனம் செய்யப்படவில்லைஅவர்களை உடனடியாக பணி அமர்த்த பள்ளிகல்வி துறை ஆனை பிறப்பிக்குமாறு இச்செயற்குழு கோருகிறது.
– தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட உருது பள்ளிகள் உள்ளன.உருது வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த அதிகாரிகளை அரசு மாற்று பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு உடனடியாக உருது வட்டார கல்வி அலுவலரை நியமிக்க ஆனை பிறப்பிக்க வேண்டும் என இச் செயற்குழு கோருகிறது.
– உருது பள்ளிகளில் ஆங்கில கல்வி வழி பயிலும் மாணவர்களுக்கு தாய்மொழி உருது புத்தகம் வழங்கப்படுவதில்லை.வரும் 2021 கல்வியாண்டில் உருது புத்தகங்களை வழங்க அரசு அறிவிக்க வேண்டும் என இச்செயற்குழு கோருகிறது வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க மமக தொண்டர்கள் பாடுபடுவது என இச்செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
A. முஹம்மது யூனுஸ்
கிருஷ்ணகிரி மாவட்டம் செய்தியாளர்
Leave your comments here...