அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு முஸ்லிம்கள் நன்கொடை.!
உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் கட்டுமான செலவுக்கு நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்படுகிறது.
இதற்கு, பல்வேறு தரப்பினரும் நன்கொடை அளித்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் பைசாபாதைச் சேர்ந்த, முஸ்லிம்கள் இணைந்து, 5,100 ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.
ராம் பவனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நன்கொடை வழங்கிய பிறகு, முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பின் உறுப்பினர் ஹாஜி சயீத் அகமது கூறும்போது, ‘ராமர் ஹிஸ்துஸ்தானுக்கு சொந்தம்; நாங்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். ஹிந்துக்கள் எங்களுடைய சகோதரர்கள். கோவில் கட்டுவதற்கு தொடர்ந்து நன்கொடை வழங்குவோம்,” என, அயோத்தி முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் உறுப்பினர் ஹாஜி சயீது அகமது கூறியுள்ளார்.
நம் நாட்டில் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவுவதை உலக நாடுகளுக்கு மீண்டும் உறுதி செய்துள்ளோம். ”ராமர் கோவிலுக்கு முஸ்லிம் சகோதரர்கள் நன்கொடை அளித்துள்ளதை வரவேற்கிறோம்.
Leave your comments here...