சென்னை விமான நிலையத்தில் 1.01 கிலோ தங்கம் பறிமுதல்.!
சென்னை விமான நிலையத்தில் 1.01 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.48.9 லட்சம்.
துபாயில் இருந்து ‘பிளை துபாய்’ விமானம் மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்ற பயணியிடம், சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது,2 தங்க பசை பொட்டலங்களை அவர் தனது உடலில் மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றிலிருந்து 416 தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.19.9 லட்சம்.
Chennai Air Customs:1.01 kg gold worth Rs. 48.9 lakhs seized under Customs Act in 2 cases; 2 gold paste bundles recvd from rectum of pax(416 gm) & rummaging flt 6E66, 6 gold bars(600 gms) recovered from hollow pipe under seat. pic.twitter.com/xGgspJ9DDl
— Chennai Customs (@ChennaiCustoms) February 7, 2021
மற்றொரு சம்பவத்தில் இண்டிகோ விமானம் ஒன்றில், சீட்டுக்கு அடியில் 600 கிராம் எடையில் 6 தங்க துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.29 லட்சம். மொத்தம் 1.01 கிலோ எடையில், ரூ.48.9 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
Leave your comments here...