தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நல்ல திட்டங்கள் நிறைய கிடைக்கும் – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பேட்டி.!

அரசியல்இந்தியா

தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நல்ல திட்டங்கள் நிறைய கிடைக்கும் – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பேட்டி.!

தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நல்ல திட்டங்கள் நிறைய கிடைக்கும் –  மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பேட்டி.!

தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நல்ல திட்டங்கள் நிறைய கிடைக்கும் என மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ளார்.

மதுரை அழகர் கோவில் பிரதான சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய சாலை போக்குவரத்து துறை நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சரும்,முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்தும், தமிழகத்தின் நடப்பு அரசியல் குறித்தும் பேசினார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்:- இந்த வருட தாக்கல் செய்யபட்ட பட்ஜெட் குறித்து அவர் பேசுகையில், கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் அதில் இருந்து மீட்கும் விதமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. குறிப்பாக சுகாதாரம், உள் கட்டமைப்பு , ஏழைகளுக்கான பட்ஜெட், மனித மூல தனம் அதிகபடுத்துவது, நவீன மயமாக்கல் ஆராய்ச்சிகளுக்கான பட்ஜெட்டாக உள்ளது என்றார்.

கொரானாவுக்கு பிறகு இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரானா பாதிப்புள்ள காலகட்டத்தில் சுகாதாரம், தொழில் கட்டமைப்பு, பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் தான் இந்த பட்ஜெட் இருக்கிறது. பட்ஜெட் ஆறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு மக்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் அனைத்து துறைகளுக்கும் நிதி குறிப்பிடத்தக்க வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. சாலை விரிவாக்க பணிகளுக்காக பலகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு மக்களின் பயண நேரம் குறைக்க வழிவகை ஏற்படும்.தொழில் நிறுவனங்கள் பொருட்களை விரைவாக கொண்டு செல்ல வசதி. தில்லியில் இருந்து மும்பைக்கு 12 மணி நேரத்தில் செல்லும் அளவுக்கு சாலை வசதிகள் செய்ய நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. ஆவாஸ் யோஜனா திட்டம் முழுமையாக செயல் படுத்துபட உள்ளது .

மேலும் , பெண்கள் முன்னேற்றம் குறித்தும், சமையல் எரிவாயு 8 கோடி பேருக்கு கொடுக்கபட்டுள்ளது. இதை 10 கோடியாக மத்திய அரசு அதிகரிக்க உள்ளது. பெண்கள் அனைத்துத் துறைகளிலும் வேலை செய்யலாம் என்றும் இரவு நேரங்களிலும் செய்யலாம் என்றும், பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் முக்கியத்துவம் வகிக்கின்றனர். பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்ற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட்டில் ஏழை எளிய மக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. பட்ஜெட்டில் புலம்பெயர் தொழிலாளர் களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 35,000 கோடி கோவிட் 19, தடுப்பு மருந்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் அதிகளவு விவசயிகளுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சுவாமி நாதன் கமிட்டியில் கூறியது போல் இந்த பட்ஜெட்டில் அதிக அளவில் விவசாயத்திற்கு முக்கிய துவம் கொடுக்கபட்டுள்ளது. மலைவாழ் மக்களிள் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு துறைக்கு சென்ற ஆண்டை விட அதிகமாக இந்தாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு காரணம் ராணுவத்திற்காக, நாட்டின் பாதுகாப்பிற்காக என ஒரே வார்த்தையில் கூற முடியும். நாட்டின் பாதுகாப்புக்கு அதிக அளவு பட்ஜெட் ஒதுக்கீடு செய்தால் பாதுகாப்பான தளவாடங்களை நாம் கையாள முடியும்.

தேர்தலுக்கான பட்ஜெட் என்கிற எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்த கேள்விக்கு:- பட்ஜெட்டின் நோக்கம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது மட்டுமல்லாமல் கொரானாவிலிருந்து பாதுகாப்பது. கச்சத்தீவு முடிந்த போன கதை. அது இருந்த இடத்தில் தான் உள்ளது. அது நீண்ட கால பிரச்சனை..அது இரண்டு நாடுகளுக்கு ஏற்பட்ட ஒப்பந்தம் படி உள்ளது. அது அப்படியே தொடர்கிறது. அந்த நாடு ஒத்துக்கொள்ளும் வரை இந்தியா தனது முன்னெடுப்புகளை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இந்தியாவிற்கு நெருக்கமான நட்பு நாடு இலங்கை. மீனவர் விஷையத்தில் சில பிரச்சனைகள் உள்ளது. ஆழ் கடலில் மீன் பிடிக்கும் வசதிகளை அரசு செய்து கொண்டுள்ளது.

மத்திய பிஜேபி அரசோடு அதிமுக நல்ல உறவோடு உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நல்ல திட்டங்கள் நிறைய கிடைக்கும். இந்தியா எல்லை வரைபடம் சரியாக வரையறை செய்யப்பட வில்லை. பலஆண்டுகளாக சீன படை இந்திய எல்லைக்குள் ஊடுருவி வருகிறது. தற்போதுள்ள அரசு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 10 முறை சீனா ஊடுருவினால் இந்தியா 50 முறை சென்றுள்ளது. அது பற்றி நாங்கள் வெளியில் கூறவில்லை. சீனாவிடம் தெளிவாக கூறியுள்ளோம். தற்போது சீனாவிடம் பொருளாதார தாக்குதல் நடத்தி வருகிறோம். அது அவர்களுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நம்பிக்கை வையுங்கள் திட்டமிட்ட காலத்தில் எய்ம்ஸ் நிச்சயம் வரும். தமிழகத்திற்கு ராகுல்காந்தி வருவதை நீங்கள் தான் பெரிதாக எடுக்கிறீர்கள் என கூறினார்.

செய்தி: Ravi Chandran

Leave your comments here...