ரூ.2.45 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் : ஒருவர் கைது.!

சமூக நலன்தமிழகம்

ரூ.2.45 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் : ஒருவர் கைது.!

ரூ.2.45 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் : ஒருவர் கைது.!

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏற்றுமதி பொருட்கள் கிடங்கில், 24.5 கிலோ சூடோபெட்ரைன் என்ற போதைப் பொருளை சுங்க அதிகாரிகள பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக, சுங்க அதிகாரிகளுக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மீனம்பாக்கத்தில் உள்ள ஏற்றுமதி பொருட்கள் கிடங்கில், சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சமையல் பாத்திரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்ட அட்டை பெட்டி பிரித்து சோதனையிடப்பட்டது.

அப்போது, தேங்காய் துருவியின் அடிபாகத்தில் 3 சிறிய மரப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. அதில் வெள்ளை நிற பவுடர் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.


அவற்றை சோதனை செய்தபோது, அது தடை செய்யப்பட்ட சூடோபெட்ரைன் என்ற போதைப் பொருள் என தெரியவந்தது. மொத்தம் 12 பாலித்தீன் பாக்கெட்டுகளில் 24.5 கிலோ சூாடோபெட்ரைன் இருந்தது.இவற்றின் மதிப்பு ரூ.2.45 கோடி. போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இது பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பெட்டியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிய சென்னையைச் சேர்ந்த வி.எம். எக்ஸ் இம்ப் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த கடத்தல் தொடர்பாக விவேகானந்தன்(43) என்பவர் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெறுவதாக, சென்னை ஏர் கார்கோ சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்

Leave your comments here...