தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா – சவுதி அரேபியா இணைந்து செயல்படுகிறது- பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல் சவுத், அழைப்பின் பேரில், இரண்டு நாள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றார்.அதனைத் தொடர்ந்து சவுதி மன்னரின் அரண்மைக்கு சென்ற பிரதமர் மோடி, சவுதி அரேபியாவின் எரிசக்தி துறை அமைச்சர் அப்துல்லாசிஸ் பின் சல்மான், சுற்றுச்சுழல்துறை அமைச்சர் அப்துல்ரகுமார் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். அப்போது வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், தண்ணீர் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
சவுதிஅரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் மற்றும் பட்டத்து இளவரசர் மொஹம்மது பின் சல்மான் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். ரியாத்தில் நடை பெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3 வது அமர்விலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார்.
பிரதமர் மோடி இந்தியா-சவுதி அரேபியா உறவுகள் மற்றும் அதன் எதிர்காலம் குறித்து சவூதி செய்தித்தாள் அரபு நியூஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில்:- இந்தியா – சவுதி அரேபியா ஆகிய 2 நாடுகளுமே பாதுகாப்பு விவகாரத்தில் அண்டை நாடுகளால் ஒரே மாதிரியான பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. வளரும் நாடுகள் மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிக்கு நிலையான கச்சா எண்ணெய் விலை இன்றியமையாதது. தீவிரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகள் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி தருகிறது.இந்தியா, சவுதி அரேபியா ஆகியவை இதேபோன்ற பாதுகாப்புக் கவலைகளை தங்கள் சுற்றுப்புறத்திலும் பகிர்ந்து கொள்கின்றன. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற பல்வேறு பரிமாணங்களில் உள்ள எங்கள் உறவுகள் வலுவான மற்றும் ஆழமானவை, மேலும் அவை மேலும் பலப்படும் என கூறினார்.