சோழவந்தானில் கிராமங்கள்தோறும் சென்று சாலை பாதுகாப்பு வார விழா.!
சாலை பாதுகாப்பு வார விழாவானது சோழவந்தான் பகுதியில் நடந்தது. மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில், சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் ஆலோசனையின் பேரில், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் வசந்தி சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர் ராஜா ரவி சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் அருள்பாண்டி ராஜேந்திரன் தலைமை காவலர்கள் கோபி சுந்தரபாண்டி செல்லப்பாண்டி சிவபாலன் பாண்டி ஆகியோர் கிராமங்கள்தோறும் சென்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதையொட்டி சோழவந்தான் மற்றும் மேலக்கால் கிராமத்தில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது மற்றும் மாணவி உடைய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது இதில் மோட்டார் சைக்கிள் இரண்டும் விபத்துக்குள்ளாகி அதில் விழக்கூடிய நபர்கள் காயம்பட்டு உயிருக்கு போராடுவதை போல சித்தரிக்கும் காட்சியை பொதுமக்கள் கண்டு களித்தனர்.பின்னர், சோழவந்தான் நகரில் பொதுமக்கள் கூட கூடிய இடத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .
Leave your comments here...