அந்தமான் கடலில், ‘கவாச்’ என்ற பெயரில் பாதுகாப்பு படைகள் கூட்டு பயிற்சி
இந்திய ராணுவம், கடற்படை , விமானப்படை மற்றும் கடலோர காவல் படை ஆகியவை இணைந்து, அந்தமான் கடல் பகுதியில், வரும் வாரத்தில் மிகப் பெரியளவிலான கூட்டு பயிற்சியை மேற்கொள்கின்றன. அந்தமானில் உள்ள கூட்டுப்படை கட்டுப்பாட்டு மையத்தின் தலைமையில் இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன.
இதில் ராணுவத்தின் நீர் மற்றும் நிலப்பகுதியில் போரிடும் படைப் பிரிவு, கடற்படையின் போர்க்கப்பல்கள், விமானப்படையின் ஜாக்குவார் மற்றும் போக்குவரத்து விமானங்கள், கடலோர காவல் படை கப்பல்கள் பங்கேற்கின்றன.
கடல்சார் கண்காணிப்பு கருவிகள், விமானப்படை மற்றும் கடற்படை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் தாக்குதல் பயிற்சி, வான் பாதுகாப்பு பயிற்சி உட்பட பல பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஒரே நேரத்தில் முப்படைகளின் பல்வேறு தொழில்நுட்ப, மின்னணு மற்றும் மனித உளவுத்துறை சம்பந்தப்பட்ட கூட்டு கண்காணிப்பு மற்றும் மறுமதிப்பீடு (ஐ.எஸ்.ஆர்) பயிற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
Leave your comments here...