வேளாண் சட்டங்களை மாநில அரசுகளுக்கு பரிந்துரையாக அளிக்கலாம் – சத்குரு
“மத்திய அரசு வேளாண் சட்டங்களை நாடு முழுவதற்குமான சட்டமாக இல்லாமல் மாநிலங்களுக்கான ஒரு பரிந்துரையாக அளிக்கலாம்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வேளாண் சட்டங்கள் பற்றிய விவசாயிகளின் ஐயம் பகுதிவாரியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். விவசாயிகளுடன் சேர்ந்து மாநில அரசு அவர்களது தேவைகளை ஆய்வுசெய்து கவனிக்க வேண்டும். கூட்டு முயற்சியே முன்னேறும் வழி” என்று கூறியுள்ளார்
Farmer apprehension in the wake of the #FarmBills must be assessed on a region to region basis. Together with the farmers, state leadership must assess and address these needs. A collaborative effort is the only way forward. -Sg pic.twitter.com/epj0l2FSsA
— Sadhguru (@SadhguruJV) January 17, 2021
மேலும், அந்த பதிவுடன் சேர்த்து ANI செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த வீடியோ பேட்டியையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சத்குரு பேசியிருப்பதாவது: விவசாய சட்டங்களில் எந்த விஷயம் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளை வருந்தச் செய்கிறது என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை. இங்கே (தமிழ்நாட்டில்) இருக்கக்கூடிய விவசாய சமூககத்தை சார்ந்த யாரையும் இந்த சட்டங்கள் பாதித்ததாக தெரியவில்லை. நான் பல விவசாயிகளுடன் பேசி இருக்கிறேன். அவர்கள் யாரும் அப்படி உணரவில்லை.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், அல்லது வெவ்வேறு மாநிலங்களில் குறிப்பிடத்தக்க சந்தேகங்கள் இருக்கலாம் என நான் நினைக்கிறேன். நான் நினைப்பது, விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து கொண்டு இருப்பது மற்ற குடிமக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்துகிறது மற்றும் அவர்களும் பெருத்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த போராட்டம் முடிவில்லாமல் சென்று கொண்டிருப்பதால் அரசாங்கமும் சரிவர இயங்க முடியவில்லை.
அதனால், நான் நினைப்பது இந்த சட்டங்களை நாட்டிற்கும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு பரிந்துரையாக அளிக்கலாம். மேலும், இந்த சட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், என்ன மாதிரியான முதலீடுகள், எந்த வகையிலான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புகள் உருவாகும் என்பதையும், தொடர் விநியோக சங்கிலிகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உள்கட்டமைப்புகளை கொண்டு வரும் என்பதையும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு விவரிக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு விதமான கவலைகள் இருக்கலாம். ஏனென்றால் விவசாயமே ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகிறது. அவர்களுக்கு விவசாயத்தை கார்பரேட் நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் என்ற சந்தேகங்கள் இருந்தால், மாநிலங்கள் தேவையான சட்ட திருத்தங்களை செய்து இது போன்ற அம்சங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அது தான் முன்னோக்கி செல்வதற்கான வழி. அனால் தற்போது துரதிர்ஷ்டவசமாக அதிக அளவில் மக்கள் தேவையே இல்லாமல் இன்னல்களுக்கு உள்ளாவது என்பது மிகப்பெரிய அளவிலான தவறான புரிதல் என்றே நினைக்கிறேன்.
இந்நேரத்தில் மத்திய அரசு இந்த சட்டங்களை பரிந்துரைகளாக அளிக்கலாம், மாநில அரசுகள் அம்மாநில விவசாயிகளுடன் கலந்து பேசி அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப திருத்தங்களை செய்து அமல்படுத்திக் கொள்ளலாம். அதுவே நாடு முன்னோக்கி செல்வதற்கான வழியாக நான் பார்க்கிறேன். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.
Leave your comments here...