பொதுமக்களின் நல்ல தோழனாக திண்டுக்கல் , தேனி காவல் துறை செயல்படும். டி.ஐ.ஜி முத்துசாமி பேச்சு.!
திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட இ.பி.காலனி கரும்புச்சாலை குடியிருப்பு பகுதிகளில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .
மேற்படி கரும்புச்சாலை குடியிருப்பில் வசித்துவரும் பொதுமக்கள் சார்பாக 32 சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் 16 முக்கிய இடங்களில் காவல் துறை வழிகாட்டுதலின் பேரில் பொறுத்தப்பட்டுள்ளது .
இன்று 16.01.2021 ஆம் தேதி மேற்படி சி.சி.டி.வி. கேமராக்கள் செயல்பாட்டு திறப்பு விழா நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல் துறை துணைத்தலைவர் எம்.எஸ்.முத்துசாமி IPS ., அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார் .
இந்த நிகழ்வில் பேசிய காவல் துறை துணைத்தலைவர் குடியிருப்புப்பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா பொறுத்துவது 24 மணி நேரமும் எப்போதும் விழித்திருக்கும் காவலர்கள் பணியிலிருப்பதற்கு சமம் , இந்த சி.சி.டி.வி. கேமராக்கள் ஜாதி மத பேதங்களை கடந்து எந்த ஒரு நபரையும் கண்காணிக்க உதவும் , அது மற்றுமின்றி பல தரப்பட்ட குற்றங்களை கண்டறிய உதவியாக இருக்கும்.
இந்த சி.சி.டி.வி. கேமராக்கள் இருப்பதால் 100%சதவிகிதம் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு நிம்மதியாய் தூங்கலாம் , பொதுமக்களின் நல்ல தோழனாக திண்டுக்கல் , தேனி மாவட்ட காவல் துறை செயல்படும் என்று பேசினார் .
இந்த நிகழ்ச்சியில் முருகன், காவல்துணைக் கண்காணிப்பாளர் , நிலக்கோட்டை உட்கோட்டம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
Leave your comments here...