கர்னல் பென்னி குயிக் 180வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய விவசாயிகள் மற்றும் வியாபாரிகள்.!
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெறும் வகையில், முல்லை பெரியாறு அணையினை கட்டிய கர்னல் பென்னிகுயிக்கின் 180வது பிறந்தநாள் வரும் ஜனவரி மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி மேலூர் பேருந்து நிலையமான கர்னல் பென்னிகுயிக் பேருந்து நிலையம் முன்பு, மேலூர் முல்லை பெரியாறு – வைகை ஒருபோக பாசன விவசாயிகள் மற்றும் மேலூர் வர்த்தக நலச்சங்கம் சார்பாக அவரது திருவுருவப்படம் வைக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது,
மேலூர் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் ரகுபதிராஜா மற்றும் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னதாக மேலூர் காஞ்சிவனம் சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது, இதனைத் தொடர்ந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கர்னல் பென்னிகுயிக் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
Leave your comments here...