பொங்கல் பானையில் கட்டும் மஞ்சள் கிழங்கு ஆயிரம் ஏக்கரில் உற்பத்தி செய்த பிறகும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை..!
பொங்கல் பானையில் கட்டும் மஞ்சள் கிழங்கு ஆயிரம் ஏக்கரில் உற்பத்தி செய்த பிறகும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையாக கூறுகின்றனர்
மதுரை மாவட்டம் பாலமேடு அலங்காநல்லூர் மற்றும் எர்ரம்பட்டி கோவில்பட்டி மாணிக்கம்பட்டி கீழ சின்னம்பட்டி அழகாபுரி புதுப்பட்டி உள்பட சுமார் 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் கிழங்கு கடந்த ஆடி மாதம் நடவு செய்து தற்போது, பொங்கலுக்காக மதுரை ராமநாதபுரம் ஈரோடு திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்து வருவதாகவும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், கடந்த ஆண்டை விட விளைச்சல் குறைவாகவே உள்ளது மேலும், இந்தப் பகுதியில் மஞ்சள் விவசாயம் முழுக்க முழுக்க சாத்தையாறு அணையை நம்பி உள்ளது .
கடந்த 8 ஆண்டுகளாக சாத்தியார் அணையில் போதிய நீர் வரத்து இல்லாததால் போர்வெல் மூலம் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது மஞ்சள் விவசாயம் எதிர்பார்த்த அளவு இல்லை.மேலும் நோய் தாக்குதல் காரணமாகவும் விளைச்சல் குறைவாக உள்ளது .
மேலும் , 30 சென்ட் நிலத்தில் ரூபாய் 50 ஆயிரம் செலவு செய்து ரூபாய் 22 ஆயிரம் மட்டும் கிடைப்பதாக கூறுகிறார்கள் அடுத்த ஆண்டு மஞ்சள் விவசாயம் செய்யவே மிகவும் யோசனையாக உள்ளது அரசு உரிய நடவடிக்கை எடுத்து மஞ்சள் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூபாய்7 ஆயிரத்துக்கு மட்டுமே செல்வதால் எங்களால் உரிய லாபம் எடுக்க முடியவில்லை பொங்கலுக்காக பானையில் கட்டும் சிறப்புவாய்ந்த மஞ்சள் கிழங்கை விளைவித்து தரும் எங்களைப்போன்ற விவசாயிகளுக்கு போதிய உதவி செய்து கை தூக்கி விட்டால் அடுத்து வரும் காலங்களில் மஞ்சள் விவசாயம் செய்ய தயாராகவே இருக்கிறோம் என்று இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
Leave your comments here...