சமூக நலன்
மதுரை மேலமடையில் சாலையில் நாற்று நடும் நூதனப் போராட்டம் – கழிவுநீர் தேங்கியுள்ளதை அகற்றக் கோரி கோஷம்.!
மதுரை மாநகராட்சி 30- வது வார்டு மேலமடை சௌபாக்யா விநாயகர் கோயில் தெருவில் பல மாதங்களாக மழை காலங்களில் வாசலில் சாக்கடை நீரானது சாலையில் பெருக்கெடுத்து நோய்களை பரப்புகிறதாம்.
மேலும், மாநகராட்சியால் கழிவு நீர் கால்வாயை தூர்வார ஆர்வம் காட்டததால், கொசுத் தொல்லை பெருகி வருகிறதாம். இது குறித்து அப்பகுதியில் குடியிருப்போர் பலர், மதுரை மேலமடையில் உள்ள உதவிப் பொறியாளரிடம் புகார் அளித்தும், கழிவு நீர் கால்வாயை சீரமைக்காததால், வெள்ளிக்கிழமை, பெண்கள் மற்றும் ஆண்கள் நூதனமாக சாலையில் சூழ்ந்துள்ள கழிவு நீரில் நாற்று நடும் போராட்டத்தை ஈடுபட்டனர்.
இந்த கழிவு நீர் கால்வாயை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைக்காவிட்டால், வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனர்.
Leave your comments here...