பினாமி சொத்து வழக்கு: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை.!

இந்தியா

பினாமி சொத்து வழக்கு: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை.!

பினாமி சொத்து வழக்கு:  சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை.!

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது, பினாமி சொத்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி கோரியபோது, அவர் கொரோனா சூழலை காரணம் காட்டி ஆஜராக மறுத்தார்.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தாங்களாக நேரடியாக சென்று விசாரிக்க தொடங்கினர்.நேற்று முன்தினம் (திங்களன்று) தொடர்ந்து 8 மணி நேரம் அவரது அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடந்தது. நேற்று 2–வது நாளாக விசாரணை தொடர்ந்தது.

இந்­நி­லை­யில், இது அர­சி­யல் பழி­வாங்­கும் நட­வ­டிக்கை என காங்­கி­ரஸ் கட்சி தெரி­வித்­துள்­ளது. உண்மை வெற்றி பெறும் என்று ராபர்ட் வதேரா கூறி­யுள்­ளார். பினாமி வழக்கு தொடர்­பாக விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­கு­மாறு ராபர்ட் வதேராவி­டம் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் பல­முறை கேட்ட போதும் கொரோனா விவ­கா­ரத்­தால் தம்­மால் விசா­ர­ணை­யில் இணைய முடி­ய­வில்லை என்று அவர் கூறி­ய­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது. இதை­ய­டுத்து வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் அதி­ரடி நட­வ­டிக்­கை­யாக ராபர்ட் வதேராவின் வீட்­டுக்கே நேர­டி­யா­கச் சென்று அவ­ரது வாக்­கு­மூ­லத்­தைப் பெற்­ற­னர்.

லண்­ட­னில் ராபர்ட் வதேரா­வுக்கு சில சொத்­து­கள் இருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. கணக்­கில் காட்­டப்­ப­டாத இந்த சொத்­து­கள் குறித்து வரு­மான வரித்­துறை விசா­ரித்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கிறது.

Leave your comments here...