தமிழகத்தில் வரும் 8-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் – சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஜன.,13ம் தேதி விநியோகிக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தேசிய மருந்து சேமிப்பு கிடங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜன.,8 ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும். சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் கொரோனா தடுப்பு மருத்து சேமித்து வைக்கப்படவுள்ளது. மொத்தம் 2 கோடி தடுப்பூசி பதப்படுத்தி வைக்கும் வசதி தேசிய மருந்து சேமிப்பு கிடங்கில் உள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கிய அடுத்த நாளில் இருந்து தடுப்பூசி விநியோகிக்க தமிழக அரசு தயாராக உள்ளது. ஒரு நாளில் 100 பேர் வீதம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். முதலில் சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், அதன்பிறகு முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...