மன் கி பாத் நிகழ்ச்சியில் கோவை சிறுமி, விழுப்புரம் ஆசிரியை குறித்து பாராட்டிய பேசிய பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இந்த ஆண்டின் கடைசி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
இன்றைய நிகழ்ச்சியில் அவர் பேசிய போது:- தமிழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்த ஹேமலதா என்பவர் மிகத் தொன்மையான மொழியான தமிழை கற்று கொடுத்து வருகிறார். கொரோனா காலத்தில், மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர ஒரு புதிய வழியை முயற்சித்துள்ளார். புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களையும் அனிமேஷன் வீடியோவாக மாற்றி, பென்டிரைவ் மூலம் மாணவர்களுக்கு விநியோகம் செய்ததுடன், தொலைபேசி மூலமும் கற்று கொடுத்துள்ளார். இதேபோல், இந்த படிப்புகளை கல்வி அமைச்சகத்தின் திக்ஷா தளத்தில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்டு கொள்கிறேன்.
Received a wide range of inputs for this month’s #MannKiBaat. Tune-in. https://t.co/c5wsyxa1Oq
— Narendra Modi (@narendramodi) December 27, 2020
தமிழகத்தை சேர்ந்த 92 வயதான ஸ்ரீஸ்ரீநிவாஸாச்சாரியார் சுவாமி, தற்போதும் கணினியில் தனது புத்தகத்தை எழுதி வருகிறார். தானே தட்டச்சும் செய்கிறார். எதுவரை வாழ்க்கை ஆற்றல் நிரம்பியதாக உள்ளதோ, அதுவரை வாழ்க்கையில் கற்கும் பேரார்வம் இறப்பதில்லை. கற்று கொள்ளும் விருப்பமும் மரிப்பது இல்லை என்றார்
கோவையை சேர்ந்த காயத்ரி என்ற பெண், தனது தந்தையுடன் இணைந்து பாதிக்கப்பட்ட ஒரு நாய்க்காக ஒரு சக்கர நாற்காலி ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த புரிந்துணர்வு உத்வேகம் அளிக்கிறது. அனைத்து உயிர்களிடத்தும் தயவும், கருணையும் மனதில் நிறைந்திருந்தால் மட்டுமே இப்படி ஒருவரால் செய்ய முடியும். இளைஞர்களிடம், என்னால் முடியும் என்ற அணுகுமுறையும், செய்தே தீருவேன் என்ற உணர்வும் உள்ளது. இவர்களுக்கு, எந்த ஒரு சவாலும் பெரியதே அல்ல என்று அவர் கூறினார்.
Leave your comments here...