2030ல் 3வது பெரிய பொருளாதார நாடாக உருவாகும் இந்தியா – பிரிட்டன் பொருளாதார ஆராய்ச்சி மையம் தகவல்.!
கடந்த 2019ம் ஆண்டு உலகின் 5வது பெரிய நாடாக மாறிய இந்தியா, பொருளாதார பிரச்னை காரணமாக 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம்(சிஇபிஆர்) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பாதிப்பு காரணமாக, இந்தியாவானது, 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2019ல் பிரிட்டன் பின்னடைவை சந்தித்த போதும், அந்நாடு எடுத்த நடவடிக்கை காரணமாக மீண்டும் 5வது இடத்திற்கு வந்தது.
தற்போது, நிலவும் சூழல் காரணமாக 2024ம் ஆண்டில் இந்தியா மீண்டும் 5வது இடத்திற்கு வரும். ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தான் இந்த ஆண்டு பிரிட்டன் 5வது பெரிய நாடாக மாறியது.2021ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமும் 2022ல் 7 சதவீதமும் அதிகரிக்கும். இந்த வளர்ச்சி விகிதம் மூலம், இந்தியாவானது, 2024 ல் பிரிட்டனையும், 2027 ல் ஜெர்மனியையும், 2030 ல் ஜப்பானை முந்தி 3வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும்.
2028 ம் ஆண்டில் சீனாவானது, அமெரிக்காவை முந்தி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழும். கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி காரணமாக, ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட 5 ஆண்டுகளுக்கு முன்பே சீனா முதலிடத்திற்கு வரும். டாலர் அடிப்படையில் 2030 வரை ஜப்பான் 3வது பெரிய பொருளாதார நாடாகவும், ஜெர்மனி 5வது பெரிய பொருளாதார நாடாகவும் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...