கர்நாடகாவில் ரூபாய் 11,000 கோடி மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை துவக்கி வைத்தார் நிதின் கட்கரி.!
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடகாவில் 1200 கிலோ மீட்டர் நீளமுள்ள 32 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை காணொலி மூலம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இத்திட்டங்களின் மதிப்பு சுமார் ரூபாய் 11 ஆயிரம் கோடி ஆகும். விழாவில் பேசிய கட்கரி, வரும் வருடங்களில் ரூபாய் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 144 கோடியை கர்நாடகாவில் மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளதாக கூறினார்.
Inaugurated & laid foundation stones for 33 national highway projects in Karnataka with a total cost of 10,904Cr in the presence of Chief Minister Shri @BSYBJP ji, Former Prime Minister Shri @H_D_Devegowda ji, Union Minister Shri @JoshiPralhad ji,… pic.twitter.com/eq5P1noRKC
— Nitin Gadkari (@nitin_gadkari) December 19, 2020
நாட்டில் அதிக அளவில் கரும்பை விளைவிக்கும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று என்று குறிப்பிட்ட அமைச்சர், எத்தனால் உற்பத்தியை அதிக அளவில் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.கடந்த ஆறு வருடங்களில் 900 கிலோ மீட்டருக்கும் அதிகமாக தேசிய நெடுஞ்சாலைகளில் நீளம் கர்நாடகாவில் அதிகரிக்கப்பட்டது என்று கூறிய திரு,கட்கரி, கர்நாடகாவில் தற்போது 7652 கிலோமீட்டர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதாகக் கூறினர்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, சதானந்த கவுடா மற்றும் ஜெனரல் டாக்டர். வி. கே. சிங், மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Leave your comments here...