சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன், ‘பிஎஸ்எல்வி. சி-50’ ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி- 50 ராக்கெட்.
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று(டிச.,17) மாலை 3.41 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இதற்கான 25 மணி நேர கவுண்டவுன், நேற்று மதியம் 2.41 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து ராக்கெட்டின் 4ம் நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகள் துவக்கப்பட்டு, குறித்த நேரத்துக்குள் முடிவடைந்தது.
#PSLVC50 lifts off successfully from Satish Dhawan Space Centre, Sriharikota#ISRO #CMS01 pic.twitter.com/9uCQIHIapo
— ISRO (@isro) December 17, 2020
இந்த ராக்கெட்டில் செலுத்தப்பட்ட ‘சி.எம்.எஸ்-01’ செய்கைக்கோள், தகவல் தொடர்பு வசதிக்கான ‘சி பேண்ட்’ அலைக்கற்றை பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் அலைவரிசை, இந்தியாவிலும், அந்தமான் – நிகோபர், லட்சத் தீவுகளில் பயன்படுத்த முடியும். சி.எம்.எஸ்.01 செயற்கைகோள், 1.400 கிலோ எடை கொண்டது.
#CMS01 successfully separated from fourth stage of #PSLVC50 and injected into orbit#ISRO
— ISRO (@isro) December 17, 2020
இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் ஆகும். தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ விண்ணில் ஏவிய 42வது செயற்கைகோள் இதுவாகும். இணையவழிக்கல்வி, பேரிடர் கண்காணிப்பு மற்றும் செல்போன் சேவையை சிஎம்எஸ்-01 செயற்கைகோள் எளிதாக்கும்.
Leave your comments here...