இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி50 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியது.!
கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் ராக்கெட் ஏவும் பணிகள் அனைத்தையும் இஸ்ரோ தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
கடந்த மாதம் 7ம் தேதி பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற நவீனரக புவிகண்காணிப்பு செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதையடுத்து, வரும் 17ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிற்பகல் 3.41 மணிக்கு இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும் சி.எம்.எஸ்-01 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
Countdown for the launch of #PSLVC50/#CMS01 mission commenced today at 1441 Hrs (IST) from Satish Dhawan Space Centre (SDSC) SHAR, Sriharikota.
Launch is scheduled tomorrow at 1541 Hrs IST . pic.twitter.com/oYURy06OGc
— ISRO (@isro) December 16, 2020
இந்த செயற்கைகோளில் உள்ள சி-பேண்ட் அலைக்கற்றைகள் இணைய சேவை மற்றும் செல்போன் சேவைகளை மேம்படுத்த உதவுகிறது. பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட்டானது பி.எஸ்.எல்.வி ராக்கெட் ரக வரிசையில் 52வது ராக்கெட் ஆகும். சி.எம்.எஸ்-01 செயற்கைகோள் இந்தியாவின் 42வது தகவல் தொடர்பு செயற்கைகோள் ஆகும். இந்திய நிலப்பரப்பு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சேவையை இந்த செயற்கைகோள் மேம்படுத்த உதவும்,
Leave your comments here...