திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றிய மர்ம நபர்கள்.!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் மர்மநபர்கள் தீபம் ஏற்றியதால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஆனது மலையின் மீது அமைந்துள்ள உச்சி பிள்ளையார் கோயில் மேல் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் ஆண்டு தோறும் போராட்டங்கள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மலை உச்சியில் மீது உள்ள தீபத் தூணில். மர்ம நபர்கள் தீபம் ஏற்றி உள்ளனர்.
இதுகுறித்து ,தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு திருப்பரங்குன்றம் காவல்துறையினர் விரைந்து சென்றனர். மேலும் மலை உச்சியில் தீபத் தூண் அருகே தர்காவும் அமைந்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீப தூணில் யார் தீபம் ஏற்றியது என்பது குறித்து திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பாக காவல்துறையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் காவல்துறையினர் மலைப்பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்துமர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரித்து வருகின்றனர். மேலும் மலைப்பகுதி செல்லும் வழியில் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Leave your comments here...