காய்கறி கடைகாரர்களுக்கும் நன்றி சொல்லுங்கள் – சத்குரு வேண்டுகோள்

சமூக நலன்

காய்கறி கடைகாரர்களுக்கும் நன்றி சொல்லுங்கள் – சத்குரு வேண்டுகோள்

காய்கறி கடைகாரர்களுக்கும் நன்றி சொல்லுங்கள்  – சத்குரு வேண்டுகோள்

காய்கறி கடைகாரர்களுக்கும் நன்றி சொல்லுங்கள் சத்குரு என வேண்டுகோள் விடுத்துள்ளார்

“நீங்கள் அடுத்த முறை எந்த கடைக்கு சென்றாலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக சில்லறை வர்த்தக ஊழியர்கள் தினமான இன்று (டிசம்பர் 12) World Retail Employees Day சத்குரு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: வணக்கம், உலக சில்லறை வர்த்தக ஊழியர்கள் தின வாழ்த்துக்கள். ஆன்லைன் வர்த்தகம் என்பது பிரபலம் அடைந்து வரும் சூழலிலும் சில்லறை வர்த்தக துறையின் ஊழியர்கள் பல வழிகளில் நமக்கு சேவையாற்றி வருகிறார்கள் என்பதை நாம் மறக்க கூடாது.

மளிகை பொருட்கள் விற்பனையில் தொடங்கி பல விஷயங்களை அவர்கள் நமக்கு கிடைக்க உதவியாக உள்ளார்கள். இந்தியாவில் 4.6 கோடி பேரும், உலகம் முழுவதுமாக சேர்த்து 50 கோடிக்கும் அதிகமான
ஊழியர்கள் நம் வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் நமக்கு கிடைப்பதை உறுதி செய்கின்றனர்.


நம்முடைய சமூக, பொருளாதார சூழலில் மிக முக்கிய பங்காற்றினாலும், அதிகம் கவனம் ஈர்க்கப்படாமல் இருக்கும் இந்த வீரர்களுக்கு நாம் உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். நீங்கள் அடுத்த முறை எந்த கடைக்கு சென்றாலும், அவர் தக்காளி, உருளை கிழங்கு போன்ற காய்கறிகளை விற்கும் சிறு விவசாயியாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த பெரிய கடைக்கு சென்றாலும் சரி அங்குள்ள ஊழியர்களை பார்த்து புன்னகை செய்யுங்கள், வணக்கமோ, நன்றியோ சொல்லி அவர்களின் சேவையை அங்கீகரியுங்கள். இது மிக மிக முக்கியானது.

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அவர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து நமக்கு அனைத்து தளங்களிலும் சேவையாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

இந்திய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை வர்த்தக அமைப்புகளுக்கான அறக்கட்டளை சார்பில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி உலக வர்த்தக ஊழியர்கள் தினமாக அறிவிக்கப்பட்டது.

Leave your comments here...