கேரள தங்க கடத்தல் வழக்கு : சிறையில் எனது உயிருக்கு ஆபத்து – ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் மனு

இந்தியா

கேரள தங்க கடத்தல் வழக்கு : சிறையில் எனது உயிருக்கு ஆபத்து – ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் மனு

கேரள தங்க கடத்தல் வழக்கு : சிறையில் எனது உயிருக்கு  ஆபத்து – ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் மனு

கேரளா மாநிலத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் வழக்கில், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்வப்னாவை, சுங்கதுறை அதிகாரிகள் சமீபத்தில் காவலில் எடுத்து விசாரித்தனர். காவல் முடிவடைந்ததை அடுத்து, அவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை, வருகிற, 22 வரை நீட்டித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கேரள தங்க கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.கூடுதல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், சிறைச்சாலையில் தனக்கு மிரட்டல்கள் விடப்பட்டன. அதனால், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

அதிக செல்வாக்குள்ள நபர்களால் சிறை வளாகத்திற்குள் எனது உயிருக்கு பாதிப்பு ஏற்பட கூடும். முக்கிய அரசியல்வாதிகளின் பெயர்களை கூற கூடாது என அதிகாரிகள் என்னிடம் சிறையில் தெரிவித்தனர். விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்க கூடாது என்றும் என்னிடம் கூறினர். அப்படி இல்லையென்றால் என்னுடைய குடும்பத்திற்கு தீங்கு நேரிடும் என்றும் மிரட்டல் விடப்பட்டது என தெரிவித்து உள்ளார். சிறையில் எனக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க, நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...