சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் ரூ 22.66 லட்சம் மதிப்புள்ள தங்கம், ஐபோன்கள், சிகரெட்டுகள் பறிமுதல் – ஒருவர் கைது
சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் ரூ 22.66 லட்சம் மதிப்புள்ள தங்கம், ஐபோன்கள், சிகரெட்டுகள் பறிமுதல்
உளவுத் தகவலை தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐ எக்ஸ் 1644-இல் துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் அப்துல் மன்னான், 46, மற்றும் தமீமுன் அன்சாரி அப்துல் ரஷீத், 34, ஆகியோர் தங்கம் கடத்தி வருவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
Chennai Air Customs: 240 gms gold,11 iPhone 12, 45 cartons cigarettes & 11 used PC's totally valued at Rs. 22.66 lakhs seized under Customs Act from 2 pax who arrived by flt IX1644 from Dubai on 2 Dec. One pax arrested. pic.twitter.com/1xwVEpk0Vu
— Chennai Customs (@ChennaiCustoms) December 2, 2020
அவர்களை சோதனை செய்த போது, 98 கிராம் எடையுள்ள இரண்டு தங்கத் துண்டுகள், 169 கிராம் எடையுள்ள ஒரு தங்கப் பசை பொட்டலம் (அதில் 142 கிராம் எடையுள்ள தங்கம் இருந்தது) கைப்பற்றப்பட்டன. மொத்தம் ரூ 12 லட்சம் மதிப்புடைய 240 கிராம் 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களின் பைகளை சோதனை செய்து பார்த்த போது, அவற்றில் 11 ஐபோன் 12 கைபேசிகள், 45 அட்டைப்பெட்டிகளில் சிகரெட்டுகள், 11 பயன்படுத்தப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட லெனோவோ கணினிகள் ஆகியவை சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ 10.66 லட்சம் ஆகும். தமீமுன் அன்சாரி அப்துல் ரஷீத்தின் மீது ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.ரூ 12 லட்சம் மதிப்புடைய தங்கம், ரூ 10.66 லட்சம் மதிப்புள்ள கைபேசிகள், பயன்படுத்திய கணினிகள் மற்றும் சிகரெட்டுகள் உட்பட ரூ 22.66 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Leave your comments here...