வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் : ரயில் மீது கல்லெறிந்த பாமக.,வினர்
வன்னியர் சமூகத்திற்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க.,வினர் சென்னையில் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
இதற்காக தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் இருந்து பாமக.வின் சென்னை நோக்கி பயணித்தனர். ஆனால் அவர்கள் பெரும்பாலும் சென்னைக்கு முன்பே பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் செய்ய உரிமை உண்டு!
ஆனால் அராஜகம் செய்தால், ஒருவர் கூட ஓட்டு போட மாட்டார்கள்!நல்ல மாற்றம்! நல்ல முன்னேற்றம்!!👌 pic.twitter.com/V346ugVE0C
— Raammm (@RamRam1718) December 1, 2020
போராட்டம் என்ற பெயரில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. குறிப்பாக பா.ம.க.,வினர், ரயிலை மறித்து அவற்றின் மீது கற்களை வீசி எறிவதும், ரயில் நின்ற பின்பும் கற்களை தூக்கி தாக்கும் வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.
இதை
நீங்கள்
அனுமதிக்கிறீங்களா @drramadoss @draramadoss pic.twitter.com/hjQCmq66oy— MANIKANDAPRABHU NAIDU (@MANIKAN24314712) December 1, 2020
இதை சுட்டிக்காட்டியும், இன்னும் பிற அசம்பாவித சம்பவங்களை சுட்டிக்காட்டியும் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பெருங்களத்தூரில் பல மணிநேர போக்குவரத்து நெரிசலால் பலர் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
Leave your comments here...