கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க மிசோரம் மாநில அரசு தடை.!

இந்தியா

கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க மிசோரம் மாநில அரசு தடை.!

கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க மிசோரம் மாநில அரசு தடை.!

காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாகவும், நோயாளிகளின் சுவாச பிரச்னைகளை கருத்தில் கொண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிப்பதை தடை செய்ய மிசோரம் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் லாக்சம்லியானா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வான வேடிக்கைகள், பொம்மை துப்பாக்கிகள் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது.

இதனை கண்காணிக்கும் விதமாக சிறப்பு போலீசார் மொபைல் ரோந்து பணிகள் வாயிலாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனஅதிகாரிகள் தெரிவித்தனர்.முன்னதாக மிசோரம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் காற்று மாசுபாடு மற்றும் கொரோனா தொற்றை காரணம் காட்டி தீபாவளி தினத்தன்று பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

Leave your comments here...