பசுக்களின் நலன்களுக்காக கோமாதா வரி விதிக்க மத்திய பிரதேச திட்டம் – மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தகவல்

அரசியல்

மத்திய பிரதேசத்தில் பசுக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக பசு பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் சமீபத்தில் அறிவித்தார்.

மேலும் இந்த அமைச்சகத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு, வனம் மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை செயல்படும் எனவும், இதற்கான முதல் கூட்டம் வரும் 22ல் அகர்மால்வாவில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பசுவின் நலனுக்காக பணம் திரட்டுவதற்காக கோமாதா வரி விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பசுக்கள் நலனுக்காகவும், மாட்டுக்கொட்டகைகளின் பராமரிப்புக்காக பணம் திரட்டுவதற்கும் சில சிறிய வரி விதிக்க நான் யோசிக்கிறேன். நம் இந்திய கலாசாரத்தில் விலங்குகளுக்கான அக்கறை இப்போது மறைந்து வருகிறது. எனவே மாடுகளுக்காக பொதுமக்களிடம் இருந்து கோமாதா வரியை வசூலிக்க யோசித்து வருகிறோம்” என்றார்.

Leave your comments here...