நாடு முழுவதும் தொடக்க கல்வியில் மனநல பாடத்தை அமல்படுத்தக்கோரி குமரியிலிருந்து டெல்லிவரை முன்னாள் ராணுவ வீரர் நடைபயணம்.!
தற்கொலையைத் தடுக்கவும், நேர்மறையான எண்ணங்களை விதைக்கவும் பள்ளிகளில் கட்டாய மனநல பாடத்தை இணையக்க வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து டெல்லிவரை 4 ஆயிரம் கி.மீட்டர் விழிப்புணர்வு பிரச்சார நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர்.
ஜார்கண்ட் மாநில ராஞ்சியைச் சேர்ந்தவர் ரோனித்ரஞ்சன் (23). அரசியல் பொருளாதாரம் பட்டம் படிக்கும் இவர் ராணுவத்தில் 2 ஆண்டுகள் பயணியாற்றியவர். முதுகெலும்பில் அடிபட்டதால் ராணுவத்திலிருந்து விலகினார். தற்போது, இந்திய அளவில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கட்டாய மனநல பாடத்தை இணைக்க வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து டெல்லிக்கு 4 ஆயிரம் கி.மீ. விழிப்புணர்வு பிரச்சார நடை பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இன்று காலை விருதுநகர் நகர் வந்த ரோனித்ரஞ்சன் வளர்ந்து வரும் நம்நாட்டில் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்கிறார். 13-15 வயதுக்கு உட்பட்ட 4 மாணவர்களில் ஒருவர் மனச்சோர்வால் பாதிக்கப்படுகிறார். 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நம்நாட்டில்தான் அதிக தற்கொலைகள் நடக்கின்றன. எனவே, நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டாயமாக மனநல பாடத்தை இணைக்க வேண்டும்.
இதை வலியுறுத்தும் வகையில் கடந்த 16ம் தேதி கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பிரச்சார நடை பயணத்தைத் தொடங்கியுள்ளேன். வழிநெடுகிலும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களைச் சந்தித்து இக்கோரிகைக்காக கையெழுத்திப்பெற்று வருகிறேன். நடைபயணமாக டெல்லியை அடைந்து மத்திய கல்வி அமைச்சகத்தில் இந்த கையெழுத்துக்களை சமர்ப்பிக்க உள்ளதாகத் கூறினார்.
Leave your comments here...