அயோத்தியில் தீப உற்சவம் : 5.84 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை படைத்தது
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தீர்ப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் விழா கோலம் பூண்டது.
प्रभु श्री राम, समता, समन्वय, शुचिता, मर्यादा, त्याग, धैर्य, करुणा एवं पुरुषार्थ आदि गुणों के सर्वोच्च प्रतिनिधि हैं। ‘अंत्योदय’ उनका स्वभाव है।
प्रभु श्री राम के स्वागत का अर्थ है उनके गुणों का अभिनन्दन। इन गुणों के उजास से सम्पूर्ण धरा को भर देना ही "दीपोत्सव" का उद्देश्य है। pic.twitter.com/SVsCTq1vPO
— Yogi Adityanath (@myogiadityanath) November 13, 2020
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தீப உற்சவம் எனப்படும் தீபம் ஏற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. தீப உற்சவத்தையொட்டி அயோத்தி ராமர் கோவில் முழுவதும் தீப ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.
அயோத்தியில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் ஆனந்திபென் படேல் முன்னிலையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் 5,84,572 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வின்போது பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்: “இந்த தலைமுறையினர் ராமர் கோயில் கட்டுவதை பார்க்கும் வாய்ப்பு மட்டுமல்லாமல் இன்று நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பார்க்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.ராமர் கோயில் கட்டும் கனவில் கடந்த 500 ஆண்டுகளில் ஏராளமான துறவிகள் உயிரிழந்துள்ளனர். ராம ராஜ்ஜியத்தை கொண்டுவர நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
Earthen lamps lit on the bank of River Saryu in Ayodhya as part of 'Deepotsava'. pic.twitter.com/q5UNbYtpWt
— ANI UP (@ANINewsUP) November 13, 2020
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தே இந்த தீப உட்சவத்தை கொண்டாடி இருக்கிறோம்.ராமர் கோயில் கட்டுமானத்தின்போதும் இதேபோல பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறினார்
Leave your comments here...