தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வந்த OTT தளங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள் ..!

இந்தியா

ஆன்லைன் செய்தி வழங்கும் தளங்கள், நடப்பு நிகழ்வுகளை அளிக்கும் தளங்கள் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் ஆகியவற்றை தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. புதிய நடவடிக்கை குறித்து ஒடிடி தளங்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மத்திய அரசின் உத்தரவு காரணமாக விரைவில் மேற்கூறிய தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொது நல வழக்கு ஒன்றின் போது, டிஜிட்டல் தளங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் அதை ஒழுங்குபடுத்துதல் அவசியம் என சமீபத்தில் மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...