மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்பட துறையை சேர்ந்தோருடன் பிரதமர் மோடி ஆலோசனை.!
- October 20, 2019
- jananesan
- : 978
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையை சேர்ந்தோருடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.இதில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், நடிகைகள் கங்கனா ரணாவத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தயாரிப்பாளர் போனிகபூர், ஏக்தா கபூர், இம்தியாஸ் அலி உள்பல பலர் கலந்து கொண்டனர்.
Picture for: The film fraternity comes together to pay tributes to #MahatmaGandhi!
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, படைப்பாற்றல் சக்தி அளப்பறியது என்றும், நமது நாட்டின் நலனுக்காக அது பயன்படுத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார். காந்தியின் போதனைகளை பரப்பும் விவகாரத்தில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்த பலர் சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.1947 வரையிலான சுதந்திரப் போராட்ட எழுச்சியையும், 1947 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான நாட்டின் வளர்ச்சியையும் திரைத்துறை எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்தார்.மேலும் பிரதமரிடம் திரையுலகை பாதிக்கும் ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து திரையுலகினர் புகார் அளித்தனர். பள்ளிகளில் பாடத்திட்டத்தில் இசையை சேர்க்க வேண்டும் என்று பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.