திருப்பரங்குன்றத்தில் கந்தசஷ்டி திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.!
மதுரை அறுபடை வீடுகளின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா, சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் பக்கத்தர்கள் கூட்டத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கந்தசஷ்டி திருவிழாக்கள் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளும் கோயிலுக்கு உள்ளேயே உள் திருவிழாவுக்காக நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற நவம்பர் 15 தேதி பக்கத்தார்களை தவிர்த்து சுவாமிக்கு மட்டும் காப்புகட்டும் நிகழ்வு, அதனைத் தொடர்ந்து 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வேல் வாங்குதல் மற்றும் சூரசம்ஹாரம் போன்ற நிகழ்வுகள் கோவிலுக்குள் ஆகவே உள்திருவிழாவாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே காப்புகட்டிகொண்டு வழிப்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave your comments here...