நாடு முழுவதும் 4.39 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு.!

இந்தியா

நாடு முழுவதும் 4.39 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு.!

நாடு முழுவதும்  4.39 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிப்பு.!

நாடு முழுவதும் பொது விநியோக முறையில், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால், கடந்த 2013ம் ஆண்டிலிருந்து இதுவரை 4.39 போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன.

பொது விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த, தொழில்நுட்ப ரீதியிலான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. பயனாளிகளுக்கு ஆதார் எண்கள் இணைக்கப்பட்ட, டிஜிட்டல் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.

இதன் மூலம் போலி ரேஷன் அட்டைகள் அடையாளம் காணப்பட்டு ரத்து செய்யப்பட்டன. 2013ம் ஆண்டு முதல் 2020 வரை 4.39 கோடி போலி ரேஷன் அட்டைகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நீக்கியுள்ளன. நேர்மையான பயனாளிகளுக்கு பழைய ரேஷன் கார்டுகளில் பெயரை நீக்கி, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 81.35 கோடி பேர், ரேஷன் கடைகள் மூலம் மானிய விலை உணவு தானியங்களை பெற்ற வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கை நாட்டின் 2011 மக்கள் தொகை கணக்குப்படில் 3ல் 2 பங்கு. தற்போது 80 கோடிக்கும் அதிகமானோர், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிலோவுக்கு ரூ.3, 2, 1 என்ற மானிய விலையில் மாதந்தோறும் உணவு தானியங்களை பெற்று வருகின்றனர்.

Leave your comments here...