சென்னை விமான நிலையத்தில் ரூ37.3 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.!
சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் ரூ 37.3 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஈகே-0542 மூலம் சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது முர்சின் இப்ராகிம், 42, பரக்கத் அலி சதுருதீன், 45, ஆகிய பயணிகள் சந்தேகத்தின் அடிப்படையில் விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் வாயிலில் இடைமறிக்கப்பட்டனர். அவர்களை விசாரித்த போது தங்கப் பசையை மறைத்து வைத்து எடுத்து வந்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களை சோதனையிட்டபோது 166 கிராம் எடையுடைய இரண்டு பொட்டலங்களில் இருந்து 146 கிராம் எடையுடைய தங்கம் கண்டறியப்பட்டது.
Chennai Air Customs:713 gms of gold valued at Rs 37.3 lakhs seized under Customs Act from 4 pax who arrived by flts EK 542 & FZ 8517 on 6th & 5th Nov resp from Dubai.4 bundles/pouches,1 chain, 2 gold cutbits were recovered. pic.twitter.com/0ZoFYvmev8
— Chennai Customs (@ChennaiCustoms) November 6, 2020
மேலும் 66 கிராம் எடையிலான இரண்டு தங்கத் துண்டுகளும், 30 கிராம் எடையிலான ஒரு தங்கச் சங்கிலியும் கண்டறியப்பட்டன. ரூபாய் 12.8 லட்சம் மதிப்புடைய மொத்தம் 241 கிராம் 24 கேரட் தங்கம் அவர்களிடமிருந்து சுங்கச் சட்டம் 1962-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.வியாழக்கிழமையன்று, துபாயிலிருந்து ஃபிளை துபாய் விமானம் (எஃப் இசட் 8517) மூலம் சென்னை வந்திறங்கிய ராமநாதபுரத்தை சேர்ந்த ஜபீர் கான், அபூபக்கர் சித்திக் ஆகிய பயணிகள் வெளியே செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களை சோதனையிட்டபோது இரண்டு பொட்டலங்களில் இருந்து 574 கிராம் எடையுடைய தங்கம் கண்டறியப்பட்டது. ரூபாய் 24.5 லட்சம் மதிப்புடைய மொத்தம் 472 கிராம் தங்கம் அவர்களிடமிருந்து சுங்கச் சட்டம் 1962-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.ரூபாய் 37.3 லட்சம் மதிப்புடைய மொத்தம் 713 கிராம் 24 கேரட் தங்கம் மேற்கண்ட நபர்களிடமிருந்து சுங்கச் சட்டம் 1962-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.
Leave your comments here...