சமூக நலன்
சாஸ்தா அணை, விவசாயத்திற்காக திறப்பு ; அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தார்.!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம். 43 அடி கொள்ளளவு கொண்ட சாஸ்தா கோவில் அணையில், தற்போது பெய்த மழையினால் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
சாஸ்தா அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரினால், 8 கண்மாய்களுக்கு பாத்தியப்பட்ட சுமார் 50 ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. விவசாயப் பணிகளுக்காக அணையை திறக்க வேண்டும் என்று அந்தப்பகுதி விவசாயிகள், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சாஸ்தா கோவில் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மலர் தூவி, அணையிலிருந்து நீரை திறந்து விட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், திருவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா உட்பட அதிகாரிகளும், கட்சியினரும் கலந்து கொண்டனர்.
Leave your comments here...